ஜிமெயிலின் புதிய வசதி: Incoming Mail and Chat Alert



நாம் எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும் ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ தெரியாது.
இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங்கை நாம் தவற விட்டு விடுவோம். நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது. ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும்.
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்கு பதில் அளிக்க இயலும்.



 இந்த வசதியை பெற முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com  உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  1.பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  2. அதன் பின் அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.


  படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.

  3. அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புதிய மெயில் அல்லது சாட்டிங் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வந்து விடும்.
இந்த வசதியை தற்பொழுது கூகுள் குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் மட்டுமே பெற முடியும்.


Protect your PC by blocking access to many Windows features.

 Deskman

If you share a PC with others, or for some other reason want to lock down specific parts of your PC, give Deskman a whirl.


                        Want to block access to a fixed drive, removable drive, USB drive, network drive, CD drive...well, pretty much any drive? Deskman can do that. How about blocking access to Internet Explorer, Windows Explorer, the desktop? Yes, it can do that. Will it block access to specific keys, or even mouse functions, such as left-mouse click? Yes, it can do that as well.

                         One of Deskman's more powerful features is Desktop Lock, which can lock out access to the desktop, and even cover the desktop with a translucent panel, hiding all windows. You can also allow access to certain features, and lock out others. And the Freeze feature is also useful. It will let anyone run the currently running programs, but no others.


                          Making Deskman even more useful is its ability to create profiles that you can load when you want. So you may have one profile for when you want to allow a young child to use the computer, and another for when you want an older child to do so.

Summary

Protect your PC by blocking access to many Windows features.
  • 9.3.1 Version
  • Trial License
  • Rs. 2300 Price
  • Windows XP/2000/Vista/7 Operating Systems




புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்




                             வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

                        புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த  சாதனங்களைப்  பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

                                  இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை.
இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

                                   புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன.மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.

                                கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம்.அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம்.

                                     உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:


                                           எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                                      இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer”  என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?

KVM switch



                                உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் குறிக்கிறது. அதாவது கேவியெம் சுவிச் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரே கீபோட், மொனிட்டர் மற்றும் மவுஸ் கொண்டு இயக்க முடிகிறது. ரூட்டரில் காணப்படும் நெட்வர்க் போட்டுக்குப் பதிலாக இந்த கேவியெம் சுவிச்சில் VGA (Port) போர்டுடன் PS2 அல்லது USB போர்ட் மட்டுமே காணப்படும். அத்தோடு அதை இயக்குவதற்கான மின் சக்தியை தனியாக வழங்க வேண்டிய அவசியமுமில்லை. அதனுடன் இணைக்கப்படும் கேபல்கள் மூலம் கணியிலிருந்தே மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளும்.
                          ஒரே மொனிடரில் ஒன்றுக்கு மேற்பட கணினிகளை இணைத்துப் பணியாற்றும் அமைப்பு அனேகமாக அதிக எண்ணிக்கையிலான சேர்வர் கணினிகள் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகளில் காணலாம். கணினி வலையமைப்புகளிலுள்ள நெட்வர்க சேர்வர்களை (Network Server) நிர்வகிப்பதற்கே இந்த கேவியெம் சுவிச் பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சேர்வருக்கும் தனியாக மொனிட்டர் கீபோர்ட் மற்றும் மவுஸ்களைப் பொருத்துவது அவசியமில்லாத ஒரு விடயம். ஏனெனில் சேர்வர் கணினியுடன் நேரடியான பயனர் தொடர்பு அரிதாகவே நடைபெறும். ஒரு சேர்வரை அணுக அந்த சேர்வர் கணினியிலுள்ள கீபோர்ட் மவுஸைப் பயன் படுத்த வேண்டிய தேவையிராது. கேவியெம் சுவிச்சுகளைப் பயன் படுத்துவதன் மூலம் சேர்வர் கணினிகளை இல்குவாக ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்க முடிவதோடு செலவினங்ளைகயும் குறைக்க முடிகிறது.
                           பொதுவான பாவனைக்கென வரும் கேவியெம் சுவிச் இரண்டு முதல் நான்கு கணினிகளை இணைக்கக் கூடியவாறு த்யாரிக்கப்படுகின்றன. மாறாக பெரிய கணினி வலையமைப்புக்களில் பயன் படுத்துவதற்கென 2 முதல் 64 கணினிகள் பொருத்தக் கூடிவாறான `கேவியெம் சுவிச்சுகள் பாவனையிலுள்ளன.நான்கு கணினிகளை இணைக்கக் கூடிய கேவியெம் சுவிச்சில் நான்கு VGA போர்டுகளும் எட்டு PS2 அல்லது USB போர்டுகளும் காணப்படும். இந்த நான்கு VGA போர்டிலும் நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் வீடியோ கேபல்கள் பொருத்தப்படும். அதே போன்று நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் கீபோர்ட் மற்றும் மவுஸ் கேபல்கள் எட்டு PS2 அல்லது USB போர்டுகளில் இணைக்கப்படும். அதற்கென விசேட கேபல்கள் தனியாக வாங்க வேண்டிய அவசியமில்லை. . கேவியெம் சுவிச்சுடனேயே அவை தரப்படும்.
                           எனினும் நான்கு கணினிகளிலிருந்து வரும் வீடியோ காட்சிகளும் மொனிட்டரில் ஒரே நேரத்தில் தோன்றாது. நீங்கள் விரும்பும் கணினியிலிருந்து வரும் வீடியோ வெளியீட்டை கேவியெம் ஸ்விச்சின் மேற்பகுதியில் உள்ள சிறிய பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம் பெறலாம். புதிதாக வரும் கேவியெம் சுவிச்சுகளில் கணினிக்கு கணினி மாறுவதற்கு கீபோர்டையும் பயன் படுத்த முடிகிறது. .
இரண்டு கணினிகளை ஒரே நேரத்தில் பயன் படுத்த் வேண்டிய சூழ் நிலைகளிலும் புதிதாக மொனிட்டர் வாங்குவதற்கு அதிகம் செலவாகும் எனும் நிலையிலும் இந்த கேவியெம் ஸ்விச்சை வாங்கிப் பொருத்தலாம்.